மத்திய பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்
x

சுய தொழில் செய்து வருமானம் ஈட்டுபவர்களின் மாத வருமானம் ரூ.58,250 வரை இருந்தால் வருமான வரி இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதிய வருமான வரி திட்டத்தின் படி மாதம் ரூ.62,500 வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கியமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

"ரூ.7 லட்சம் வரை வருமான வரி தேவையில்லை", ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2023-24ஆம் நிதியாண்டில் மத்திய அரசு கடன் வாங்க முடிவு- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மொபைல் போன், கேமரா, தொலைக்காட்சி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5% ஆக குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மகிளா சம்மான் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும், பெண்களின் பெயரில் இரண்டு ஆண்டுகள் சேமிப்பு செய்யும் வகையில் 7% வட்டி வழங்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பத்திற்காக 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இயற்கை உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரணாம்" என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரயில்வே துறைக்கு ரூ. 2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்படும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மூலதன செலவினங்களுக்கான நிதி நடப்பு நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரிப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


சாலை பணிகளுக்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


செயற்கை நுண்ணறிவிற்காக 3 மேன்மைமிகு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளன- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்




Next Story

மேலும் செய்திகள்