"ஒரே மாதிரியான பாடத்திட்டம்... ஜூன் முதல் அமலுக்கு வரும் "
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்லூரி இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும் அரசு பாடத்திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த புதிய நடைமுறைகள் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் ராமசாமி தெரிவித்தார்.
Next Story