ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்... இறுதிப்போட்டிக்கு இந்திய ஜூனியர் மகளிர் அணி தகுதி
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின், முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வீழ்த்தியது.
இதையடுத்து நாளை (ஜனவரி 29) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதவுள்ளன.
Next Story