2 மகள்களை ஒரே நேரத்தில் கல்லூரி அனுப்ப முடியாத சூழல் - மனம் உடைந்த பள்ளி மாணவி விபரீத முடிவு

x

2 மகள்களை ஒரே நேரத்தில் கல்லூரி அனுப்ப முடியாத சூழல் - மனம் உடைந்த பள்ளி மாணவி விபரீத முடிவு

நாமக்கல் அருகே, வறுமை காரணமாக மேற்படிப்புக்கு பெற்றோர் அனுமதி மறுத்த‌தால், 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு அருகே உள்ள பெரிய மணலி கிராமத்தை சேர்ந்த தறி தொழிலாளியான முருகனுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது 4வது மகள் மலர்க்கொடி, 12ஆம் வாகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில், கல்லூரியில் மேற்படிப்பு படிக்க விரும்பியுள்ளார். ஆனால், தந்தை முருகனிடம் போதிய பண வசதி இல்லாத‌தால், 3வது மகள் கல்லூரி படிப்பை முடித்த பின் மலர்க்கொடியை மேற்படிப்பு படிக்க வைப்பதாக கூறியுள்ளார். இதனை ஏற்காத மலர்கொடி தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற மலர்க்கொடி, அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த‌து, ராசிபுரம் தீயணைப்பு துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஒரே நேரத்தில் இரண்டு மகள்களையும் படிக்க வைக்க வசதி இல்லை என தந்தை கூறியதால், மனம் உடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்