ஐ.நா. சபையில் பங்கேற்ற நித்தியின் கைலாசா நாடு... பரபரப்பை கிளப்பிய கைலாசா தூதர்கள்

x

இந்தியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா, ஈகுவாடார் தீவு அருகே தனித்தீவை வாங்கி கைலாசா என தனி நாட்டை அறிவித்துள்ளார். அவரது சிஷியைகள் ஐ.நா. சபையில் தாங்கள் கைலாசாவின் தூதர்கள் என பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் கூட்டத்தில் கலந்துக்கொண்ட நித்தியானந்தாவின் சிஷ்யை விஜயப்ரியா, தங்கள் தலைவர் நித்தியானந்தா இந்தியாவால் துன்புறுத்தப்படுகிறார் என குற்றம் சாட்டினார். இதனையடுத்து நித்தியானந்தா நாட்டை ஐ.நா. அங்கீகரிக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்திருக்கும் ஐ.நா. தரப்பு, ஐ.நா.வில் பொதுமக்கள் தாங்கள் விருப்புவதை பேச அனுமதி வழங்கப்படுகிறது எனவும் அந்தவகையில் ஒரு தொண்டு நிறுவனமாக கூறி கைலாசா பிரதிநிதி பேசினார் எனவும் அவர்கள் பேசியது கருத்தில் கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்