உக்ரைன் வீரர் உடலில் பாய்ந்த குண்டு.."ஆப்ரேஷன் செய்தால் வெடிக்கும்.."

x


உக்ரைன் வீரர் உடலில் பாய்ந்த குண்டு.."ஆப்ரேஷன் செய்தால் வெடிக்கும்.."- மருத்துவர்களின் திக் திக் நிமிடங்கள்

எப்போதும் வெடித்துவிடக்கூடிய நிலையில் இருந்த குண்டை, ராணுவவீரரின் உடலில் இருந்து பத்திரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர் உக்ரைன் மருத்துவர்கள். படுகாயம் அடைந்த ஓர் உக்ரைன் வீரர், மார்பில் எறிகணைக் குண்டு பாய்ந்து, கடுமையாக பாதிக்கப்பட்டார்.

அவருக்கு ராணுவ மருத்துவர் ஆந்த்ரேய் வெர்பா, மிகவும் கவனமாக, அறுவைசிகிச்சை செய்து, அந்தக் குண்டை அகற்றினார்.

வழக்கமாக, இதைப் போல பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து, குண்டுகளை அகற்ற, எலக்ட்ரோகோகுலேசன் முறையுடன் அறுவைசிகிச்சை செய்யப்படும்.

அதைப் பயன்படுத்தினால், வீரரின் உடலில் இருந்த குண்டு வெடித்துவிடக்கூடிய ஆபத்து இருந்ததால், மேஜர் ஜெனரல் டாக்டர் ஆந்த்ரேய் வெர்பா, இதைத் தவிர்த்துவிட்டு, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

இந்த அறுவைசிகிச்சைக்காக, நாட்டு மக்கள் பாராட்டுமழை பொழிந்துவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்