உக்ரைன் போட்ட ஒரே ட்வீட்..எரிமலையாய் வெடித்த இந்தியர்கள்..மன்னிப்பு கேட்ட ஜெலன்ஸ்கி அரசாங்கம்
இந்து கடவுள் காளிதேவி குறித்த சர்ச்சை ட்விட்டுக்கு உக்ரைன் அரசு மன்னிப்பு கோரியது.
இந்து கடவுள் காளியை தவறாக சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றை உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. கலை வேலைப்பாடு என ட்விட் செய்யப்பட்டிருந்த பதிவில், குண்டுவெடித்து வரும் புகையின் மேலே காளி படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த செயல் இந்தியார்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உக்ரைனை கடுமையாக விமர்சனம் செய்த இந்தியர்கள், மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர். இதனையடுத்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் சர்ச்சைக்குரிய ட்விட்டை நீக்கியது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன் அரசு மன்னிப்பு கோரியிருக்கிறது. உக்ரைன் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ட்விட் செய்தியில், சர்ச்சைக்குரிய பதிவுக்காக வருந்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை மதிக்கிறது எனவும் சர்ச்சைக்குரிய ட்விட் நீக்கப்பட்டுவிட்டது எனவும் இருதரப்பு உறவு மற்றும் நட்புறவை மேலும் அதிகப்படுத்த தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.