நெருங்கி வரும் உக்ரைன் சுதந்திர தினம் - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிபர்

x

உக்ரைனின் சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில், ரஷ்ய தாக்குதல் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் 24ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரஷ்யா ஏதேனும் தீய செயல்களை செய்ய முயற்சிக்கலாம் என்று தெரிவித்த அவர், ரஷ்யா உக்ரைனில் விரக்தியையும் பயத்தையும் பரப்ப அனுமதிக்கக் கூடாது என்றும் உக்ரைன் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்