உக்ரைன் மாணவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சருடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பு

x

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெற்றுத்தருமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளரை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தினார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது நீட் விலக்கு, புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் உக்ரைன் மாணவர்கள் விவகாரம் குறித்து தமிழக அரசின் கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்