ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சனில் உக்ரைன் தாக்குதல் - 4 உக்ரைனியர்கள் உயிரிழப்பு-ரஷ்யா கண்டனம்
கெர்சனுடன் சேர்த்து 4 பிராந்தியங்கள் பொதுவாக்கெடுப்பின் மூலம் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டன.
ராணுவ சட்டம் அமலில் உள்ள கெர்சனில் அமெரிக்க ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் நடத்திய கொடூர தாக்குதலில் 4 பேர் பலியானதாக ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை உக்ரைன் தரப்பும் ஒப்புக் கொண்டது.
ஆனால் பொதுமக்களுக்கு தடை விதித்த பின்னரே தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் தாக்குதல் நடத்தும் என்பதால் அப்பகுதியில் இருந்து பொதுமக்களை ரஷ்யா அவசரவசரமாக வெளியேற்றி வந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story