ஓய்வு எடுக்க சென்ற உதயநிதி...கதவை அடைத்து அடிதடியில் இறங்கிய திமுகவினர் - பரபரப்பு காட்சிகள் | DMK

x

கன்னியாகுமரிக்கு வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதில் அக்கட்சியினரிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மதியம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த அவரை, அமைச்சர்கள் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகைக்கு உள்ளே சென்றதும், ஒரு பிரிவினர் கதவை அடைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு பிரிவினர், கதவை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் போலீசார் முன் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்