மேடையில் தோனி இருக்க... முதல்வர் சொன்ன வார்த்தை - அமைச்சர் உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான சின்னம், பாடல், இலட்சினை உள்ளிட்டவற்றை அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் விளம்பர தூதரான தோனி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ்,தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோனி இருவருமே தங்கள் உழைப்பால் வளர்ந்த நபர்கள் என புகழாரம் சூட்டினார். இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தாம் தோனியின் ரசிகர் என்றும் அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என தாம் விரும்புவதாக கூறினார்.