"இன்னும் எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை"... "அதே செங்கலை தான் எடுத்து செல்ல நேரிடும்" - உதயநிதி ஸ்டாலின்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியை மத்திய அரசு தொடங்கவில்லை என்றால், 2024 மக்களவைத் தேர்தலின்போதும் செங்கல்லை எடுக்க வேண்டிய நிலை வரும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கும் பணிகளை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
Next Story