டூவீலரில் வந்த இருவர்... திடீரென பேருந்து மீது கல் வீசி தாக்குதல்
டூவீலரில் வந்த இருவர்... திடீரென பேருந்து மீது கல் வீசி தாக்குதல் - கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த பயங்கரம்
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் ஓட்டுனரும், பெண் பயணியும் காயமடைந்தனர். அம்பகரத்தூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து மீது, பச்சூர் அருகே எதிர்த்திசையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென்று கல்லை வீசித் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். அதில், பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்து, ஓட்டுனர் ஆட்சியப்பனும், ஒரு பெண் பயணியும் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Next Story