இரண்டரை வயது குழந்தை அடித்துக் கொலை... காதலியின் மகனை கொன்ற கள்ளக்காதலன்...

x

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வபிரகாசம். நான்கு வருடங்களுக்கு முன்பு நாமக்கலைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்திருக்கிறார் மாங்காடு அடுத்த செருகம்பாக்கம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்துள்ளனர்..இவர்களுக்கு இரண்டரை வயதில் சர்வேஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்தசூழலில்தான் செல்வபிரகாசுக்கும் லாவண்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டி அடிக்கடி சண்டையிட்டு வந்திருக்கிறார்கள். லாவண்யாவிற்கு அதே குடியிருப்பில் வசித்துவந்த மணிகண்டன் என்பரோடு கள்ளக்காதல் மலர்ந்திருக்கிறது. லாவண்யாவும் மணிகண்டனுன் கல்லூரி படிக்கும்போது காதலித்து வந்ததால் திருமணத்திற்கு பிறகும் தங்களது காதலை குடும்பத்தினருக்கு தெரியாமல் தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த காதல்விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவர மணிகண்டனின் மனைவி லாவண்யா மீது காவல் நிலையத்தில் புகார்கொடுத்திருக்கிறார். மனைவியின் துரோகத்தால் மனமுடைந்த செல்வபிரகாசம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாவண்யாயிடம் கோபித்துகொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்... சில நாட்களுக்கு பிறகு மகனையும் தன்னிடம் அழைத்துச் செல்ல முடிவுச் செய்த செல்வபிரகாசம் தன்னுடைய மாமியார் மற்றும் மனைவிக்கு போன் செய்து மகனை பற்றி விசாரித்திருக்கிறார். ஆனால், அவர்கள் சர்வேஸ்வரன் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும், சடலத்தை சுடுகாட்டில் புதைத்து இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டதாகவும் ஷாக் கொடுத்திருக்கிறார். தந்தைக்கு தெரியாமல் பெற்ற பிள்ளையை புதைத்தது செல்வபிரகாசத்துக்கு மனைவி லாவண்யா மீது சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. லாவண்யா மீது மாங்காடு போலீஸில் புகார் கொடுத்து விசாரணையை தொடங்கியிருக்கிறார். முதற்கட்ட விசாரணையில் குழந்தை அடித்து கொல்லப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

உடனே போலீசாரின் சந்தேகம் லாவண்யா பக்கம் திரும்ப கிடுக்குபிடி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் லாவண்யா, தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.ஆம், கணவர் பிரிந்துச் சென்ற பிறகு கள்ளக்காதலன் மணிகண்டனுடன் தனிக்குடித்தனம் நடந்திவந்திருக்கிறார் லாவண்யா. மணிகண்டன் சிறுவன் சர்வேஸ்வரனை இடையூராக நினைத்திருக்கிறார். கோபம் தலைக்கேறும்போதெல்லாம் சர்வேஸ்வரனை அடிப்படி, கில்லுவதென கொடுமை செய்திருக்கிறார்.சம்பவம் நடந்த அன்று சர்வேஸ்வரன் செல்போனை தண்ணீரில் போட்டிருக்கிறான். கோவம் தலைக்கேற மணிகண்டன் குழந்தையை சரமாரியாக தாக்கியிருக்கிறார். அதில் சர்வேஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.கள்ளக்காதலர்கள் இருவரும் உண்மையை மறைத்து குழந்தையை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சர்வேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார். இனிமேலும் விட்டால் போலீஸில் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த கள்ளக்காதலர்கள் உடற்கூறு ஆய்வு அறிக்கை வருவதற்கு முன்பே அவசரமாக குழந்தையின் சடலத்தை புதைத்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறை விசாரணையில் அனைத்து உண்மைகளும் அம்பலமாகியிருக்கிறது... கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரனை நடத்தி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்