ட்விட்டர் சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து விலகும் எலான்
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், தலைமை செயல் அதிகாரி பதவிக்கு வேறு ஒருவரை தேர்வு செய்து விட்டதாகவும், அவர் 6 வாரத்தில் பொறுபேற்று கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எலான் மஸ்க் நிர்வாக தலைவராகவும், தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாகவும் தொடர இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
Next Story