அதிமுகவில் அடுத்தடுத்த திருப்பங்கள்.. உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..! ஈபிஎஸ் vs ஓபிஎஸ் யாருக்கு சாதகம்..?

x

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வம் வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

செப்டம்பர் 2 ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற பரபரப்பு தீர்ப்பை கூறியது.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஈபிஎஸ் தரப்பில் கேவிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி எம். ஆர். ஷா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. மார்ச் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பொது தேர்தலுக்கு அவசரம் காட்டுவது ஏன்? என கேள்வியை எழுப்பிய உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தது.

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு, வழக்கை தசரா விடுமுறைக்கு பிறகு நவம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேல்முறையீடு மனு விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்