பிரேசில் அதிபர் தேர்தலில் திருப்பம் - வேற லெவல் ட்விஸ்ட் வைத்த மக்கள்
பிரேசில் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கும் விட சக போட்டியாளரான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.பிரேசிலில் நேற்று அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் மீண்டும் அதிபர் பதவிக்கு களம் இறங்கியுள்ள தற்போதைய அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு எதிராக மேலும் 9 போட்டியாளர்கள் உள்ளனர். அமேசான் மழைக்காடுகள் அழிப்பு, கொரோனா சர்ச்சை ஆகியவற்றால் பொல்சனாரோவுக்கு சமீப காலங்களாக சற்று செல்வாக்கு குறைந்தே காணப்பட்டது... பொல்சனாரோவை விட அவரது சக போட்டியாளரும், முன்னாள் அதிபரும், ஊழல் புகாரில் சிறை சென்று வந்தவருமான லூலா டா சில்வா முன்னணியில் உள்ளார்... முதல் சுற்றில் லூலாவுக்கு 48.4 சதவீத வாக்குகளும், பொல்சனாரோவுக்கு 43.3 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பிரேசில் அதிபர் தேர்தல் விதிமுறையின் படி வெற்றி பெற்றவர் 50 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். ஆனால் முன்னணியில் இருக்கும் 2 வேட்பாளர்களுமே தற்போது 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், பொல்சொனாரோவுக்கும் லூலாவுக்கும் இடையே மீண்டும் 2ம் சுற்று வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது. எப்படியும் அதிபராகி விடலாம் என்ற லூலாவின் கனவை பொல்சனாரோ பெற்ற வாக்குகள் சிதைத்துள்ள நிலையில், லூலா 2ம் சுற்றில் வெற்றி பெறும் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.