ஜல்லிக்கட்டு தீர்ப்பு வந்தபின் ஈபிஎஸ் போட்ட ட்விட்
அதிமுக முன்னெடுத்த சட்டப்போராட்டத்தால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தீர்ப்பை அடுத்து, ஈபிஎஸ் சென்னை பசுமை வழிச் சாலை இல்லத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் ஓ எஸ் மணியன், சி விஜயபாஸ்கர், காமராஜ், முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
Next Story