தூத்துக்குடியில் சர்ச்க்குள்ளேயே அடித்துக்கொண்ட இரு தரப்பினர் - திடீர் பரபரப்பால் போலீஸ் குவிப்பு
தூத்துக்குடியில் தூய பரி பேதுரு ஆலயத்தில், ஒரு பிரிவினர் கூட்டம் நடத்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆலய வளாகத்தில் இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
நாசரேத் திருமண்டலத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திருச்சபைகள் உள்ளன. இந்த திருச்சபையில் செயலாளர் கிப்சன் தரப்பினர் ஒரு பிரிவாகவும் எஸ்.டி.கே.ராஜன் பிரிவினர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பரிபேதுரு ஆலயத்தில் பாதிரியார் செல்வின் துரை தலைமையில், தூத்துக்குடி நாசரே திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் எஸ் டி கே ராஜன், தேவராஜ் ,கோயில் பிச்சை, ரூபன் வேதா சிங் உள்ளிட்ட நான்கு பேருக்கு எவ்வித தகவலும் அளிக்காமல் அவர்களை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கும் வகையில், வியாழக்கிழமை மாலை கூட்டம் நடத்த இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு திரண்ட ராஜன் ஆதரவாளர்கள், பாதிரியார் செல்வின் துரைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் கூட்டம் நடத்தக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்,அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.