"திருப்பு முனை"... அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ் கடிதம்

x

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரை வலையங்குளத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடும், கட்சியை பலவீனப்படுத்தும் தீய நோக்கில் பல்வேறு சோதனைகளையும் துரோகங்களையும் தொண்டர்களின் ஆதரவோடு முறியடித்து, அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று தான் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஒரே லட்சிய நோக்கோடு பணியாற்றி வருவதாக ஈபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் மதுரை மாநாட்டில் கட்சி ரீதியாக அனைத்து நிலை நிர்வாகிகளும் தொண்டர்களும், மற்றும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிறமாநிலங்களைச் சேர்ந்த தொண்டர்களும் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய வேண்டுகோளை ஏற்று தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்