துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. தோண்டத் தோண்ட வரும் சடலங்கள் - 230 பேர் பலியானதாக தகவல்

x

தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 230க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காசியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. துருக்கியில், இதுவரை 76 க்கும் மேற்பட்ட இறப்புகளை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்

. தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சிரியாவில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், பெரும் இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை தேட மீட்புக் குழுக்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்