பைக் மீது TTF கார் மோதி விபத்து.. ஆட்டோவில் ஏறி தப்பிய மஞ்சள் வீரன்....?

x

சென்னை - நுங்கம்பாக்கம்.

டிடிஎஃப் -ஐ விடாமல் துரத்தும் பிரச்சனைகள்...

கார் விபத்தில் சிக்கி தப்பி ஓடிய பயங்கரம்....?

டிடிஎஃப் கார் மோதி பைக்கில் சென்றவர் காயம்...

ஆட்டோவில் ஏறி தப்பி சென்ற மஞ்சள் வீரன்....?



பல சர்ச்சைல சிக்கி கேசுகள வாங்கி குவிச்ச டிடிஎஃப் வாசன் வாங்காத கேசானா அக்சிடண்ட் கேசையும் இன்னிக்கு வாங்கிட்டாரு. 2கே புல்லிங்கோக்களின் பவர் ஸ்டாராக பவனி வந்த மஞ்சள் வீரன் தலைதெறிக்க ஓடிய கதை தான் இது.

299 கிலோமீட்டர் வேகத்தில் படம் எடுக்க போவதாக சொல்லிவிட்டு, அடுத்த நாளே அதிவேகமாக காரை ஓட்டி, அப்பாவி நபரை இடித்து தள்ளிவிட்டு, ஆட்டோவில் தப்பிச்சென்ற மஞ்சள் வீரனின் பரப்புக்காட்சிகள் தான் இவை.

"இங்க என்ன நடந்துச்சி தெரியுமா... நாங்க பேசி சரி பண்ணிட்டோம், வீடியோ வெளிய வந்தா பிரச்சனையாயிடும்" என போறபோக்கில் வீடியோ எடுத்தவரை மிரட்டி பஞ்ச் டயலாக் பேசி விட்டு சென்றிருக்கிறார் புதுமுக நாயகன் டிடிஎஃப் வாசன்.

"மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களானு" என சொல்வது போல எந்த பக்கம் திரும்பினாலும் வான்டடாக வந்து பிரச்சனையில சிக்கி சின்னாபின்னமாகி விடுகிறார் டிடிஎஃப்.

சர்ச்சையையும் நித்தியையும் எப்படி பிரிக்க முடியாதோ, அப்படித்தான் டிடிஎஃப் வாசனையும் பிரச்சனையையும் யாராலும் பிரிக்க முடியாது.

"இதுக்கு மேல இவர பத்தி சொல்றதுக்கு என்னப்பா இருக்கு" என வாய் வலிக்க கூறி அலுத்துபோனாலும், "யாமிருக்க பயமேன்" என்று வலிய வந்து கண்டெண்ட்டுக்களை வாரி கொடுக்கும் வள்ளல் டிடிஎஃப் வாசனின் வரலாறை குட்டியா ரிவைன்டு பண்ணி பார்த்துவிட்டு வந்துவிடலாம்.

வெறும் வாசனாக இருந்த இவர் பைக்கில் லடாக் வரை சென்று, டிடிஎஃப் வாசனாக தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டார்.

பொதுமக்களுக்கு இடையூராக அதிவேகத்தில் பைக்கை ஓட்டி, அதை யூடியூப் சேனலில் வீடியோவாக பதிவிட்டு, இளைய தலைமுறைக்கு மிகமோசமான உதாரணமாக மாறியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது.

பேன்ஸ் மீட்டப்.... பர்த்டே மீட்டப்..... கடை திறப்பு விழா என டிடிஎஃப் வாசன் சென்ற இடமெல்லாம் கூடவே பிரச்சனையும் பஞ்சாயத்தும் பின் தொடர்ந்து வந்தன.

இவரின் செயல்களை கெத்து என குருட்டுதனமாக நினைத்த பல குட்டி டிடிஎஃப்-களை கடலூர் சம்பவத்தில் காவல்துறை வெளுத்து அனுப்பியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

கோட்டு போட்டு கோர்ட்டுக்கு சென்று சிக்கியது, காவல் நிலையத்தில் கப்பம் கட்டியது, என பல சரித்திர சம்பவங்கள் அவரின் வாழ்கை பக்கத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

இத்தனை பிரச்சினைகளில் சிக்கிய பிறகாவது டிடிஎஃப்பின் ஆட்டம் குறைந்ததா என்று கேட்டால் இல்லை...

சமீபத்தில் 20 லட்சத்திற்கு காஸ்ட்லி பைக்கை வாங்கி பைபாசில் அதிவேகத்தில் சீறி பாய்ந்த சிங்கத்தை போலீசார் கையும் களவுமாக பிடித்து ஃபைன் போட்டு அனுப்பி வைத்தனர்.

2கே கிட்ஸ்களின் பவர் ஸ்டாராக இருந்து சர்ச்சையில் சிக்கி போரடித்து போன டிடிஎஃப் திடீரென ரியல் ஹீரோவாக மாற நினைத்து எடுத்த அவதாரம் தான் மஞ்சள் வீரன்.

இந்நிலையில் தான் 299 கிலோ மீட்டர் வேகத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறிய டிடிஎஃப் வாசன், அதே வேகத்தை ரோட்டில் காட்டி ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் சிவப்பு நிற காரில் நண்பர்களுடன் வந்திருக்கிறார் டிடிஎஃப் வாசன். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், டூவீலரில் வந்த ஒருவரின் மீது மோதி இருக்கிறது.

இதில் அந்த நபர் படுகாயம் அடைந்துள்ளார். காரின் முன்பகுதியும் சேதமடைந்திருக்கிறது.

உடனே சுதாரித்து கொண்ட டிடிஎஃப் வாசன் பிரச்சனையில் சிக்காமல் இருக்க, அடிபட்ட நபரிடம் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசி இருக்கிறார்.

திடீரென சேதமடைந்த காரை ரோட்டிலேயே விட்டு விட்டு, ஆட்டோவை பிடித்து அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கால் வைக்குற இடமெல்லாம் கண்ணிவெடினு சொல்வது போல் வாசன் கண்ணி வெடியாய் தேடிதேடி சென்று கால் வைத்து பிரச்சனையில் சிக்குவது வழக்கமாகி விட்டது.





Next Story

மேலும் செய்திகள்