டிடிஎஃப் வாசன் படத்தில் பாடுகிறாரா அனிருத்?.. அழுது வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசன் - தீயாய் பரவும் வீடியோ
டிடிஎஃப் வாசன் நடிக்கும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் அறிமுக பாடலை பாட இருப்பதாக வெளியான தகவல் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து அதை வீடியோவாக தனது யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமடைந்தவர் டி.டி.எப் வாசன். இவருக்கு அதிகளவில் இளைஞர்களின் ரசிகர் பட்டாளம் உள்ளது.அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கியது என சாலை விதிகளை மீறியதாக டி.டி.எப் வாசன் மீது போலீசார் வழக்குபதிவு செய்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.சமீபத்தில்கூட சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் டிடிஎஃப் வாசன் சென்ற கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது. அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அந்தக் காரை, தான் ஓட்டவில்லை என்றும், தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள் என்றும் டிடிஎஃப் வாசன் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.இதனிடையே, பல சர்ச்சைகளுக்கு பேர்போன டிடிஎஃப் வாசன், மஞ்சள் வீரன் திரைப்படம் மூலம் கதாநாயகனாக வெள்ளித் திரையில் அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் செல்அம் இயக்குகிறார்.அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், டிடிஎஃப் வாசனின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.இதனிடையே மற்றுமொரு சர்ப்ரைஸாக, டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் படத்தில்.. மாஸ் ஹீரோ ஒப்பனிங் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடுவதாக தகவல் வெளியாகி அவரது ரசிகர்களிடையே ஃபையராக பரவியது.இந்த தகவல் டிடிஎஃப் வாசனின் ரசிகர்களுக்கு குதூகலமாக இருந்தாலும், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், விஜய் நடிக்கும் லியோ என டாப் ஸ்டார் படங்களில் பிஸியாக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத், டிடிஎஃப் வாசனின் படத்திற்கு அறிமுக பாடலை பாடுகிறாரா? என்பது திரைத்துறையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.இந்த தகவலை கேட்டு, டிடிஎஃப் வாசன் ரசிகர்கள் குதூகலித்து வந்த நிலையில், திருப்புமுனையாக அனிருத் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் பட டயலாகான "அவளை மீண்டும் சந்தித்தேன்...பல வருடங்களுக்கு பின்னால்" என அழுவது போன்று ரீல் செய்து டிடிஎஃப் வாசன் வெளியிட்ட வீடியோ, இணையதளத்தில் ட்ரோல் ஆகி வருகிறது.அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், டிடிஎஃப் வாசனை கலாய்த்தும் ஆதரவளித்தும் ட்ரோல் செய்து வருகின்றனர்.