தமிழர்களின் பாரம்பரிய கலைகளை காப்பாற்ற முயற்சி..அண்ணன் திருமணத்திற்கு ஜல்லிக்கட்டு காளை, சேவல் வழங்கிய தம்பி
மதுரையில் நடைபெற்ற அண்ணன் திருமண நிகழ்ச்சியில், தம்பி தனது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டு காளை, சேவல்களை வழங்கினார். திருமங்கலம் அருகே சுந்தரகுண்டு பகுதியை சேர்ந்த ராஜாராமுக்கும், அருண்மொழி என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. ராஜாராமின் சகோதரர் சுப்புராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு காளை, இரண்டு ஆட்டு கிடாய், இரண்டு சேவல் ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
Next Story