கனிம வளங்களை கடத்தும் லாரிகள்.. கை நீட்டி லஞ்சம் வாங்கும் காவலர் - சிக்கியது எப்படி..?
ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களை தடுத்து, காவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் 200 முதல் 300 லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கனிம வளங்களை கடத்தி செல்லும் லாரிகளிடம், சோதனை சாவடியில் இருக்கும் போலீசார் லஞ்சம் வாங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் ஆர்ல்வாய்மொழி அருகே நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், லாரி ஓட்டுனரிடம், காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கியுள்ளார்.
Next Story