திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
- திரிபுரா மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
- 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில், 28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
- மூவாயிரத்து 328 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 31 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
- தேர்தலில் 22 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
- ஆளும் பாஜக அதிகபட்சமாக 55 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, மீதமுள்ளவை கூட்டணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிபிஎம் 43 இடங்களிலும், புதிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 13 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
- பிராந்திய கட்சியான டிப்ரா மோதா 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. டிஎம்சி 28 இடங்களில் போட்டியிடுகிறது.
- மாநில காவல்துறை உடன் இணைந்து, பாதுகாப்பு பணியில் 400 நிறுவனங்களை சேர்ந்த 30 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Next Story