ஜாலியான நாட்டுக்கு டக்கர் பயணம்... பொழுதுபோக்கில் சிகரம் தொடும் சிலி...

x

தென் அமெரிக்காவோட மேற்கு திசையில ஒரு ஓரத்துல இருக்க இந்த நாட… கூகுள் தேடி மேப்ல பார்த்தோம்ன்னா… அகலமாவும்…குட்டியாவும் இல்லாம… கடற்கரை ஒட்டி நீளமான வடிவத்துல இருக்குமாம். உடனே உருவத்த வச்சு உள்ள ஒன்னும் இருக்காதுனு தப்புக்கணக்கு போட்றாதீங்க… இங்க மொத்தம் 19 மில்லியன் மக்கள் வசிக்குறாங்க…

சரி வலவலன்னு பேசி நேரத்தை வீணடிக்காம சட்டுபுட்டுனு ஊருக்குள்ள இறங்கி அலப்பறைய கொடுக்க ஆரமிக்கலாம் வாங்க…

சிலிக்குள்ள நுழைஞ்சதுமே தீம் பார்க், ஹோட்டல்ன்னு போர் அடிக்காம… அட்வெஞ்சர் கலந்து த்ரில்லிங்கா நாம போகபோற முதல் இடம் Marble cave of chile chico…

Carrer ஏரிக்கரையோரம் இருக்க இந்த குகையோட ஸ்பெஷல் என்னன்னா… இது மார்புலால உருவான குகை..

இந்த இடத்தோட அமைதியும் சூழலும் பிரம்மிப்பை கொடுக்குறதுனால… Marble cave-அ சுத்திபாக்க ஏராளமான சுற்றுல்லாவாசிகள் படையெடுக்க ஆரமிச்சுட்டாங்க…

தண்ணிய பார்த்ததும் சம்மருக்கு எதமா சில்லுனு ஒரு குளியல் போடலாம்ன்னு உங்களுக்கும் தோனுதுல... சரி வாங்க Algarrobo நகரத்துல இருக்க உலகத்துலயே இரண்டாவது பெரிய ஸ்விம்மிங்பூல்ல ஆனந்த குளியலை போட்டுட்டு வரலாம்…

ஸ்விம்மிங்பூல்ல ஆட்டம்போட்ட கையோட அடுத்து நாம போகபோறது… வினோதத்தின் முழு உருவமான Magic Mountain Hotel

நாமலும் நம்ம லைப்ல பல பிரம்மாண்டமான ஹோட்டலுக்குலான் போயிருப்போம்… ஆனா, இந்த ஹோட்டலோட ஸ்பெஷலே இதோட வடிவம் தான்… பிரமிட் ஷேப்ல செடி கொடிகள் வளர்ந்து காணப்படுற இந்த ஹோட்டல… முழுக்க முழுக்க மரக்கட்டை மற்றும் பாரைகள வச்சு டிசைன் பண்ணிருக்காங்க… அதவிட முக்கியமா அழகுக்கு அழகு சேர்க்குற மாதிரி ஹோட்டலோட உச்சியில ஒரு செயற்கை நீர்வீழ்ச்சியையும் செட்பண்ணி வச்சிருக்காங்க. இதனாலேயே இயற்கை அழக ரசிச்சுகிட்டே ரிலாக்ஸ் பண்றதுக்கான பெஸ்டு ஸ்பாட்டா இது இருக்கு…

சின்ன வயசுல.. நம்ம கையில பைனாகுலர் கிடச்சா பக்கத்துவீடு ஜன்னல், எதிர்வீட்டுக் கிச்சன்னு, வானத்துல இருக்க நட்சத்திரம்ன்னு எல்லாத்தையும் ஜூம் பண்ணி பார்த்து எஞ்சாய் பண்ணுவோம்… அப்டி தூரத்துல இருக்க நட்சத்திரத்தை கிட்டபார்த்து தரிசிக்க… நமக்காக கிடைச்ச வரபிரசாதம்தான் chile very large Telescope…

உலகின் மிகப்பெரிய நீச்சல் குளம்...

சிலி வானியல் ஆராய்ச்சி மையத்துல இருக்க இந்த டெலஸ்கோப்தான் உலகத்துலயே மிகப்பெரியது… சாதாரண டெலஸ்கோப்பைவிட இதோட சக்தி 25 மடங்கு அதிகமா இருக்குமாம். பல மைல் தூரத்துக்கு அந்த பக்கம் இருக்க நட்சத்திரங்களை… பக்கத்துல துள்ளியமா பார்த்து ஆராய்ச்சி பன்றதுக்கு இந்த telescope ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்குமாம்…

டெலஸ்கோப்ல ஸ்டார்ஸ் பார்த்த குஷியில அப்படியே நடந்துபோன… திடீர்ன்னு வணக்கம்டா மாப்புள Magdalena island இருந்து அப்படின்னு ஒருத்தர் என்ட்ரி கொடுத்தாரு… வேற யாருமில்லாங்க.. எல்லா நமக்கு வேண்டியப்பட்ட பென்குயின்ங்கதான்…

அட ஆமாங்க… கடற்கரை ஒட்டி இருக்க இந்த இடத்துல ஏகப்பட்ட பெயின்குயிங்க கூட்டாம் கூட்டாமா வாழ்ந்துட்டு வருதுங்களாம்… அதுனால இந்த தீவு பக்கம் வந்தீங்கன்னா… எதுக்கு நடக்குறோம்ன்னே தெரியாம, அங்குட்டும் இங்குட்டும் சுத்திட்டு திரியுற பெயின்குயின்களுக்கு மறக்காம ஹாய் சொல்லிட்டு போங்க…

இட்லி வேகும்போகும் ஆவி பறக்குறத பார்த்திருப்போம்… சுடச் சுட டீ குடிக்கும்போது ஆவி வர்றத பார்த்திருப்போம்… பூமிக்கடியில இருந்து ஆவி வந்து பார்த்திருக்கீங்களா… அட ஆமாங்க… வடக்கு சிலியில இருக்க EL Tatio Geyser-ங்குற இடத்துல பூமிக்கு அடியில இருந்து நீராவி வருது

பொலிவியன் பார்டர்ல இருக்க இந்த இடத்துல கிட்டதட்ட அறுபது நீராவி ஓட்டைகள் இருக்காம்.. கடல்ல இருந்து 4320 மீட்டர் உயரத்துல இருக்க இந்த இடத்துல.. வெப்பம் அதிகமா இருக்குறதுனாலையும், இந்த இடத்துக்கு பக்கத்துலயே எரிமலை இருக்குறனாலயே, பூமிக்கு அடியில இருக்க தண்ணீர் அழுத்தம் தாங்க முடியாம… வெளியில நீராவியா மாறி வருதாம்… உடனே வாவ் வாட் ஏ மெடிக்கல் மிராக்கல்ன்னு ஆர்வகோலாறுல… ஆவில கைய வச்சிறாதீங்க… ஊரு போற வரைக்கும் உசுறு முக்கியம்…

எல்லா இடத்தை ஒன்னுவிடாம சுத்திப்பார்த்த நாம.. கடைசியா Santiago நகரத்துல இருக்க Fantasilandia amusement park-ல எஞ்சாய் பண்ணலைன்னா… தெய்வ குத்தமாகிரும்… அதனால, இங்கிருக்க ஒவ்வொரு ரைடுலையும் ஏறி அலப்பறைய குடுத்துட்டு வரலாம் வாங்க…

நாட்டை சுத்திப்பார்த்து டயர்டு ஆனதால… ரெஸ்ட் எடுக்குற கேப்ல சிலி நாட்டோட வினோதமான விஷயங்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க…

பார்க்குறதுக்கு செழிப்பா இருந்தாலும்…சிலி நாட்டுக்கு பின்னாடி ஒரு சோகமான பிளாஷ்பேக் கதை இருக்கு…

1960-ல ஏற்பட்ட நிலநடுக்கம் மொத்தம் 1000 உயிர்களை பலி வாங்கிருக்கு… அந்த அழிவுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆன சிலி… இன்னைக்கு உலகமே திரும்பி பார்க்குற நாடா இருக்கு.

பாலைவனம்னாலே ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம வரட்சியா இருக்குங்கறது நம்ம எல்லாருக்குமே தெரியும்.. அதுல உலகத்துலயே மிகவும் வரட்சியான பாலைவனம் எதுனு பார்த்தா… சிலி நாட்ல இருக்க நம்ம Atacama desertதான்…

இதுக்கே ஷாக்கான எப்படி… இதவிட வினோதமான விழாக்கள்ளாம் நமக்காக வெயிட்டிங்ல இருக்கு… சட்டுபுட்டுனு chile நாட்டு திருவிழாக்கள்ள கலந்துட்டு தரமான சம்பவங்களை செஞ்சுட்டு வரலாம் வாங்க…

சரி… திருவிழாவுக்கு போகலாம்ன்னு… வேடிக்கை பார்த்துட்டே La Tirana town பக்கம் நடந்துபோனா… அங்க ஒரு கூட்டம் பேய் மாஸ்க், கொடூரமான வேஷம்லாம் போட்டு… நம்மள அலறவிட்டுடாங்க…

அட.. நம்மகிட்டயேவா… உள்ளுக்குள்ள நடுங்கினாலும் வெளியே கெத்த மெயின்டெய்ன் பண்ணிகிட்டு திருவிழாவ பத்தி அங்கிருந்தவங்ககிட்ட விசாரிச்சோம்…

வருஷா வருஷம் ஜூலை மாசம் virgin marry-ய செலிபிரேட் பண்றவிதமா La Tirana festival கொண்டாடுறதா சொன்னாங்க…

பேய் மாஸ்க், வினோதமான வேஷம் போட்டு, ஆட்டம் பாட்டத்தோட திருவிழா கொண்டாடுனா ஊர் செழிச்சு மக்கள் சந்தோஷமா வாழுவாங்கறது இவங்களோட நம்பிக்கை…

Tirana திருவிழாவுல பேய்ங்களோட ஜாலியா ஆட்டம்போட்டுட்டு வந்தா… இங்க ஒரு காட்டுவாசி கும்பல்… Tapati festival-ல வேரலெவல்ல fun பண்ணிட்டு இருந்தாங்க…

Easter island வாழுற பழங்குடியின மக்கள்..செத்துப்போன தங்களோட மூதாதியர்கள வழிபடுறவிதமா… வருஷா வருஷம் கேம்ஸ், டான்ஸ், பூஜைப்பண்ணி Tapati festival கொண்டாடுறாங்களாம்…

நாமலாம் அமாவாசைக்கு படையல் போட்டு காக்காவுக்கு சோறு வைக்கிற மாதிரி, இவங்க திருவிழா கொண்டாடுறாங்கபோல…

டிவி சினிமா கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடி மனுஷங்க… தெருவுல நாடகம் நடத்தி அது மூலமாதான் நாட்டு நடப்பை மக்களுக்கு தெரிவிச்சாங்க…

செல்போன் கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் மேடை நாடகங்கள மக்கள் மறந்துபோனதால… அதை மீண்டும் கொண்டுவர நினைச்ச chile மக்கள்… நாடக பாரம்பரியத்தை நியாபகப்படுத்துறதுக்காக கண்டுபிடிச்சதுதான் Santiago a Mil festival…

அதுவும் மத்த விழாக்கள் மாதிரி டான்ஸ், கச்சேரிகள் மட்டுமில்லாம… ராட்ஷச டைனோசர் உருவங்கள், பொம்மைகள வச்சு ரோட்ல டிராமா போடுறதுதான் இந்த திருவிழாவோட ஹைலைட்டான விஷயமே…

செய்யும் தொழிலே தெய்வம்ன்னு சொல்லுவாங்க.. அதுக்காகதான் வருஷத்துல ஒரு நாள் ஆயுதப்பூஜை கொண்டாடுறோம்.. அது மாதிரிதான் மீன்பிடி தொழில் செய்யுற chile நாட்டு மீனவர்கள்… San pedro விழா மூலமா… தங்களோட தொழில கெளரவப்படுத்திட்டு வராங்க…

Saint peter-ங்குற மீனவர்… உரிமைகளுக்காக போராடி மீனவ மக்களுக்கு நிறைய நல்லது செஞ்சுருக்காராம்.. அவர் செஞ்ச நன்றிய மறக்ககூடாதுனு நினைச்ச மக்கள்… தங்களோட படகுகளை அலங்கரிச்சு… வருஷத்துல ஒருநாள் San pedro விழாவ கொண்டாடுறாங்க…

பேட்டரி டவுனாக ஒட்டுமொத்த ஏரியாவையும் சுற்றிப்பார்த்த நாம... மூக்கை துளைக்குற chile நாட்டு தெருவோர உணவுகளை ருசிக்கலாம் வாங்க...

ஆரம்பமே அசத்தலான அசைவ உணவுக்கு நான் சூஸ் பண்ணது Gambas al Pil Pil இறால்... பேரு வித்யாசமா இருந்தாலும் சுவையும் மனமும் வேறலெவல்ல இருக்கு...

Corn-ஐ வேகவச்சு நெருப்புல சுட்டு சாப்பிட்ட நமக்கு... புது கெட்டப்புல கிடச்ச அற்புதமான டிஷ்தான் ஸ்வீட்கார்ன் Humitas...

டிராவல்ல எடுக்குற திடீர் பசிக்கு...வெயிட்டான லஞ்சுக்கு பதிலா... சீஸியான milcao potato bread டிரை பண்ணுங்க...

சாயங்கால டீ டைம் snack-க்கு நம்ம ஊர் சமோசா மாதிரி இருக்க Sopaipillas-தான் பக்காவான சாயிஸ்...

காரசாரமான விருந்தை வெளுத்துகட்டி... உஸ் உஸ்ன்னு சத்தம்போடுற நம்ம நாக்கை சமாதானப்படுத்த Leche Asada ஸ்வீட்டை சாப்பிட்டே ஆகனும்...

வயிறு நிறைய உணவு, மனசு நிறைய சந்தோஷம்னு... சுவாரஸ்யங்களால் நம்மள ஆச்சரியபடுத்தும் chile-க்கு 90இல்லங்க நூற்றுக்கு நூறே ரேட்டிங் கொடுக்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்