ஓடும்போதே திடீரென தீப்பிடித்த பேருந்து - நொடிப்பொழுதில் தப்பிய 30 பயணிகள்
திருச்சி அருகே தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில், நல்வாய்ப்பாக 30 பயணிகள் உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து தம்மம்பட்டிக்கு சென்ற தனியார் பேருந்து, நாக நல்லூர் திடீரென தீப்பற்றி எரிந்தது. பேருந்தில் புகை பரவ ஆரம்பித்ததுமே, உள்ளே இருந்த 30 பயணிகளும் இறங்கிவிடப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தாலும், பேருந்தும் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story