சிறந்த வீராங்கனையாக தேர்வான பழங்குடியின பெண்! அரசின் உதவிகள் கிடைக்காமல் அல்லல்

x

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறந்த சைக்கிள் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ள பழங்குடியின பெண் தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜாஸ்பூரைச் சேர்ந்த 28 வயதான பழங்குடியின பெண் எலிசபெத் பெக், வாட்டும் வறுமைக்கு மத்தியிலும் சத்தீஸ்கர் மாநிலத்திலேயே மிகச்சிறந்த சைக்கிள் வீராங்கனை என்ற பட்டத்தை வென்றுள்ளார்...

பணப்பற்றாக்குறையால் பயிற்சிக்கு சிக்கல் வந்தாலும் நம்பிக்கை குறையாமல் கடினமாக உழைத்து வரும் எலிசபெத்திற்கு அம்மாநில அரசு போதிய உதவிகள் வழங்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

திறமை இருந்தும் ஏழை என்ற ஒரே காரணத்திற்காக தான் சாதிக்க முடியாதா என்று ஏங்கும் எலிசபெத், தனது விடாமுயற்சியால் தேசிய விளையாட்டு போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்... கோபுரத்தை அலங்கரிக்கும் தகுதி இருந்தும்...

ஓட்டு வீட்டில் வசிக்கும் இந்த வைரம் ஒரு நாள் உலக அரங்கில் ஜொலிக்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்