25 ஆண்டுகளாக குடிநீர், மின்சாரம்,சாலை வசதிகள் இல்லாத பழங்குடியின கிராமம் | அவதிப்படும் மக்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உலிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியையொட்டி மேல் குரங்கு மேடு பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு குரும்பர் இனத்தை சேர்ந்த 6 குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில், மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பல முறை அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டாலும் இதற்கு நிரந்த தீர்வு ஏற்படுத்தி தரவில்லை என்று கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
Next Story