மூட்டு வலிக்கு ட்ரீட்மென்ட்.. அடுத்தடுத்து போட பட்ட 3 ஊசிகள் - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு பண்ருட்டி கரும்பூரைச் சேர்ந்த நரேஷ் என்ற 12 வயது சிறுவன் அவனது தாயாரால் அழைத்து வரப்பட்டுள்ளான். சிறுவனுக்கு மூட்டு வலிப்பதாக மருத்துவரிடம் தாயார் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனை பரிசோதித்த மருத்துவர், நரேஷுக்கு 3 ஊசிகளைப் போட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே நரேஷ் மயக்கம் அடையவே, உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தாயாரிடம் அந்த மருத்துவர் கூறியுள்ளார். நரேஷ் அங்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவன் ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். உடனே அங்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே நரேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சிறுவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு வாக்குவாதம் செய்தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தனது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் நரேஷின் தாயார் புகார் அளித்துள்ளார். ஊசி போடப்பட்ட சில மணி நேரத்திலேயே சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்