டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை...தம்பி கொலைக்கு பழி தீர்த்த அண்ணன்...

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

காஞ்சிபுரம் - ஓரிக்கை

தம்பி கொலைக்கு பழிதீர்க்க நினைத்த அண்ணன்...

1 1/2 வருடங்கள் காத்திருந்த கொன்ற பயங்கரம்...

டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை...

தம்பி கொலைக்கு பழி தீர்த்த அண்ணன்...

டிராவல்ஸ் உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஒன்னறை வருடங்கள் காத்திருந்து தம்பி கொலைக்கு பழிதீர்த்த அண்ணனின் கதை இது!

காஞ்சிபுரத்தில் உள்ள ஓரிக்கை பகுதி அந்த கொடூரத்தால் அலறி கிடந்தது.

கடை முழுவதும் தெறித்து கிடந்த ரத்தமும், தரையில் உறையாமல் ஊறி கிடந்த குறுதியும் நடந்த பயங்கரத்தின் வீரியத்தை உணர்த்தியது.


கந்தல் கந்தலாய் அரிவாளால் வெட்டப்பட்டு, உயிருக்கு போராடி கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அவசர சிகிச்சையில் அனுமதிக்கபட்டவரின் நிலமை மோசமானதால், அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.

கொல்லப்பட்டவர் பூபாலன். ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர். டிராவல்ஸ் நடத்தி வந்திருக்கிறார்.

பூபாலனின் மீதிருந்த வெட்டு காயங்கள் நடந்திருப்பது ஒரு திட்டமிட்ட கொலை என்று அப்பட்டமாக காட்டியது. நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், முதற்கட்ட விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அதில் அவர்களுக்கு கிடைத்த ஒரே பெயர் மதன்.

உடனே போலீசார் மதனை தேடி வேட்டை நடத்தியிருக்கிறார்கள். அந்த வேட்டையில் மதனின் நண்பரான செல்வம் என்பவர் சிக்கியிருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் நடந்த அத்தனையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஆம்.... பூபாலனை கொன்றது மதனும் அவரது நண்பர்களும் தான். தம்பியின் கொலைக்கு காத்திருந்து பழிதீர்த்திருக்கிறார் மதன்.

மதனின் தம்பி பெயர் மோகன். 25 வயதான மோகன் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஓர் நாள் மோகன் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா குடித்திருக்கிறார். போதையில் தள்ளாடியபடி வந்த மோகன் எதிரில் வந்த பூபாலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். காரணமே தெரியாத அந்த தகராறால் இருவருக்கும் அடிதடி நடந்திருக்கிறது. இறுதியில் பூபாலன் மோகனை கொன்றிருக்கிறார்.

தம்பியின் மரணத்துக்கு பழி தீர்க்க வேண்டும் என்ற வெறி மதன் மனதில் கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது.

மோகன் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற பூபாலன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார்.

பூபாலனை பல நாட்களாக நோட்டமிட்டு வந்த மதன் அவரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து இறுதியில் அந்த கொலை திட்டத்தை தீட்டியிருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று நண்பர்களோடு களம் இறங்கிய மதன் கண்ணிமைக்கும் நேரத்தில் பூபாலனை வெட்டிவிட்டு தப்பி சென்றிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசர், மதனையும் அவரது ஆட்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசர், மதனையும் அவரது ஆட்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை...தம்பி கொலைக்கு பழி தீர்த்த அண்ணன்...


Next Story

மேலும் செய்திகள்