தாலி அறுத்து, தலைவிரி கோலத்தில் ஆடிய திருநங்கைகள் - கூத்தாண்டவர் கோயில் படுகளம் திருவிழா
சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில், கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடந்த படுகளம் செய்யும் வழிபாட்டில், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு, பின்னர் தாலியை அறுத்து, வெள்ளை புடவை அணிந்து, தலைவிரி கோலத்தில் நடனம் ஆடினர். இதைத் தொடர்ந்து, கூத்தாண்டவரை ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று, அங்கு படுகளம் செய்யப்பட்டு, குழந்தை வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் வெள்ளை புடவை அணிந்து வழிபட்டனர்.
Next Story