ரயில் விபத்து..ஒரு சிக்கல்..அதிர்ச்சி தகவல்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதைந்திருப்பதால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள், தற்போது நடைபெற்று வருகிறது. பலரது உடல்கள் உருக்குலைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பெட்டிகளின் அடியில் சிக்கி உயிரிழந்த சிலரது உடல்கள், அடையாளம் காண முடியாத அளவு சிதைந்திருப்பதாகவும், இதனால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண குறைந்தது 2 நாட்கள் ஆகலாம் என கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Next Story