நாட்டை உலுக்கிய ரயில் விபத்து - ஒடிசா முதல்வர் முக்கிய அறிவிப்பு
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் இழப்பீடு அறிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 294 பேர் பலியாகினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story