தனி குடித்தனம் வர சம்மதிக்காததால் விரக்தி - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
சேலம் மாவட்டம் பிரமிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சிண்ட்ரல்லா, நவீன்குமார் தம்பதிக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. சிண்ட்ரல்லா, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பனியில் வேலை பார்த்து வந்துள்ளார்
இவருடைய கணவர் நவீன்குமார் சேலத்தில் கொத்தனார் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, குரோம்பேட்டையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வந்த சிண்ட்ரல்லா, இரவு திடீரென புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணவர் தனி குடித்தனம் வர சம்மதிக்காததால், மன உளைச்சலில் சிண்ட்ரல்லா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது
Next Story