பழனி முருகன் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம் - ஸ்பாட்டிலேயே 4 பேர் பலி

x

ஒட்டன்சத்திரம் அருகே பழனி முருகன் கோயிலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திரும்பிய இருவர், எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானர்கள். இதில், சீத்த பட்டியை சேர்ந்த ரத்தினம், சேகர் மற்றும் நடுப்பட்டி காலணி பகுதியை சேர்ந்த சுதாகர், துரைராஜ் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த விபத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்