ஏரியில் குளிக்க சென்றபோது விபரீதம்..- நீரில் மூழ்கிய அக்கா, தங்கை பரிதாபம்

x

திருப்பத்தூர் அருகே விளையாட்டாக ஏரியில் குளிக்க சென்ற சிறுமிகளான அக்கா தங்கை, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். புதூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் - லதா தம்பதியின் மகள்களான

லட்சிகா மற்றும் ரேஷ்மா, ஆகிய இரண்டு சிறுமிகளும் மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டி சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள ஏரியில் இருவரும் விளையாட்டாக குளிக்க இறங்கி உள்ளனர். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரு குழந்தைகள் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்