ரயிலுக்கு காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்... - கதற வைத்த ரயில்வே போலீசார்... பாய்ந்தது வழக்கு
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில் நிலையத்தில், ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை மரியாதைக் குறைவாக நடத்தியதாக, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து நாங்குநேரிக்கு, இரட்டை ரயில் பாதை ஆய்வு பணிக்காக, தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபயகுமார் ராய் வள்ளியூருக்கு வந்திருந்தார். இதனால் பகல் நேரங்களில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனை அறியாமல், ரேவதி என்ற பெண் திருப்பூர் செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் தீனா என்ற பெண் காவலர், அந்தப் பெண்மணியை அவ மரியாதையாக பேசி, ரயில் நிலையத்தை விட்டு வெளியேற்றி உள்ளனர்.
தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு முடித்துவிட்டு சென்ற பின்பும், மீண்டும் ரயிலுக்காக காத்திருந்த அந்த பெண்மணியை, ரயில்வே பாதுகாப்பு படையினர் மீண்டும் தரக்குறைவாகவும் அவமரியாதையாகவும் பேசி வெளியேற்ற முயன்றனர். இதனை அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் தட்டிக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.