கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம் - ஒரே நொடியில் தாத்தா, பேத்தி பரிதாப பலி

x

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, மின்னல் தாக்கியதில், தாத்தா மற்றும் பேத்தி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அடுத்த திமிரி ஆயிரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், 12ம் வகுப்பு படிக்கும் தனது பேத்தி லாவண்யாவுடன் சேர்ந்து, மாட்டிற்கு வாங்கிய வைக்கோல் போர்களை, மழையில் நனையாமல் இருக்க வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா-பேத்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்