சென்னையில் இன்றுமுதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்... மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அறிவிப்பு

x

மெட்ரோ ரயில் பணிகளுக்காக மீண்டும் சென்னையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றுமுதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டர்சன் சாலை, பில்கிங்டன் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, மேடவாக்கம் குளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்