சிறுவன் கையில் டிராக்டரை தந்த பெற்றோர்.. அநியாயமாய் பறிபோன சிறுவனின் நண்பன் உயிர்
- தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே டிராக்டர் சுழல் கலப்பையில் சிக்கி உயிரிழந்த பள்ளி மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
- அரியூர் கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவருக்கு சொந்தமான டிராக்டரை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் எடுத்துச் சென்று ஓட்டி வந்துள்ளான்.
- அப்போது அருகில் இருந்த மனோஜ் பாண்டி என்ற பள்ளி மாணவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து, சுழல் கலப்பையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
- இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- இந்நிலையில் இறந்த மாணவனின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த விட்டால், உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Next Story