களமிறங்கும் டொயோட்டா கேம்ரி.. இனி பெட்ரோல், பேட்டரி வேண்டாம் - இந்தியாவிற்கு வரும் புது வரவு

x

இந்தியாவில் விரைவில் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசுதிட்டமிட்டுள்ளதாக கூறினார்.

பெட்ரோலுக்கு பதிலாக எத்தனாலில் இயங்கும் கார்கள் மற்றும் இதர வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நாடுகள் ஊக்கம் அளித்து வருகின்றன.

கரும்பு, உருளை கிழங்கு, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. மதுபானங்கள் தயாரிப்பிற்கு இது தான் மூலப் பொருள்

என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனாலில் இயங்கும் வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்களை விட குறைந்த அளவில் கார்பன் டை யாக்சைடு மற்றும் இதர பசுமை வாயுக்களை வெளிப்படுத் து கின்றன.

இதனால் காற்று மாசுபடுவதை குறைக்கவும், புவிவெப்ப மயமாதலை கட்டுப்படுத்தவும் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் உதவுகின்றன.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவில் முழுவதும் எத்தனாலில் இயங்கும் டோயோட்டா கேம்ரி காரை அறிமுகபடுத்த உள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

எத்தானால் விலை லிட்டருக்கு 60 ரூபாயாக உள்ளதால், எரிபொருள் செலவு, பாதியாக குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கார் 40 சதவீத மின்சார உற்பத்தி செய்யும் என்பதால், நிகர எரிபொருள் செலவு லிட்டருக்கு 15 ரூபாயாக இருக்கும் என்றார்.களமிறங்கும் டொயோட்டா கேம்ரி.. இனி பெட்ரோல், பேட்டரி வேண்டாம் - இந்தியாவிற்கு வரும் புது வரவு

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. கரும்பில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு, அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும்.

கரும்பு விவசாயிகளுக்கும் வருவாய் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்