கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்-மேகக்கூட்டங்களின் அழகை ரசிக்கும் பயணிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக, இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வலம் வந்தனர்.
Next Story