சீர் வரிசையில் இடம் பிடித்த தக்காளி..பெண் வீட்டாரின் தரமான செயல்
சீர்வரிசையில் தக்காளி இடம்பிடித்த விநோத சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது. கே.வி.குப்பத்தைச் சேர்ந்த கனிஷ்குமாருக்கும் பள்ளிகொண்டாவை சேர்ந்த லீலா பிரியாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆடி மாதத்திற்காக பெண்ணைத் தாய் வீட்டிற்கு அழைக்க வந்த லீலாவின் பெற்றோர் சீர் வரிசையில் தக்காளியையும் வைத்திருந்தனர். கிலோ தக்காளி பல நாட்களாக நூறு ரூபாயைத் தாண்டி விற்கப்படும் நிலையில், புகுந்த வீட்டு சமையலுக்கு விலை உயர்ந்த தக்காளி பழங்களை பெண் வீட்டார் தந்தனர். உயர்ரக பழங்களுடன் சீர்வரிசை தட்டில் வைக்கப்படும் அளவிற்கு தக்காளியின் மதிப்பு கூடியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story