இல்லத்தரசிகளை விழிபிதுங்க செய்யும் தக்காளி விலை...!

x

நாடு முழுவதும் தக்காளி விலை 120 ரூபாயை தாண்டிச் செல்லும் சூழலில், இதற்கான காரணம் என்ன...? விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை என்ன...? வியாபாரிகள் சொல்வது என்ன..? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

ஒரு மாதத்திற்கு முன்பாக சாலையில் கொட்டப்பட்ட தக்காளி, இன்று பார்த்தாலே தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ தக்காளி விலை நாடு முழுவதும் சதம் அடித்து, அதையும் தாண்டிச் செல்கிறது.

அன்றாட தேவைக்கு காய்கறிகளை வாங்கச் செல்வோரை இந்த விலை உயர்வு விழிபிதுக்க செய்திருக்கிறது. இந்த சூழல் நாடு முழுவதும் நிலவுகிறது.

இப்படி விலை உயர்வதற்கு காலதாமதமான தென்மேற்கு பருவமழை பொழிவால் விவசாயிகளிடம் ஆர்வமின்மை, வட மாநிலங்களை வாட்டிய உயர்ந்த வெப்ப அலை, விளைச்சல் பகுதிகளில் கொட்டிய திடீர் கனமழையால் பயிர்கள் சேதம் ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. தமிழகத்திற்கு கர்நாடகாவின் கோலார் மற்றும் ஆந்திராவிலிருந்து வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் சொல்கிறார்கள்.

தக்காளி விலை வாங்கும் இடத்திலேயே அதிகமாக உள்ளதாக சொல்கிறார்கள் வியாபாரிகள்...

ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளிக்கு விலை இல்லாததால் செடியை அழித்து நடப்பட்ட செடிகளில் கிடைக்கும் பழங்களுக்கு விலை கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்

மறுபுறம் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறும் பொதுமக்கள், விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள்.

கூட்டுறவு அங்காடிகளில் தக்காளியை விற்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கும் சூழலில், மாவட்டம் தோறும் விளைப்பொருட்களை பாதுகாக்க குளிர்சாதண கிடங்குகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்