இன்றைய தலைப்பு செய்திகள் (30-12-2022) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் இன்று காலமானார்...

காந்தி நகரில் உள்ள மயானத்தில் உடல் தகனம்...

இறுதிச்சடங்கு முடிந்த பின், மேற்குவங்கத்தில் 7800 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார், பிரதமர் மோடி...

100வது பிறந்தநாளின் போது தாய் சொன்ன வார்த்தைகள், எப்போதும் நினைவில் இருக்கும் என பிரதமர் மோடி உருக்கம்...

முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமருக்கு ஆறுதல்...

சென்னை மெரினாவில் உருவாக்கப்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மணல் சிற்பம்...

இன்று திறந்து வைத்து விழிப்புணர்வு வாசகத்தில் கையெழுத்திட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்...

18 கோடி ரூபாய் மதிப்பில், மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தும் திட்டம் தொடக்கம்...

ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மாநில தேர்தல் ஆணையம் கடிதம்...

உட்கட்சி விவகாரம் குறித்து சிலரால் செயற்கையாக குளறுபடிகள் உருவாக்கப்படுவதாக, ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டு...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி...

முதலமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கத்தினர் திட்டவட்டம்...


Next Story

மேலும் செய்திகள்