இன்றைய தலைப்பு செய்திகள் (23/10/2022) | 7 PM Headlines

x

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு

கோவையில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில், சிலிண்டர் வெடித்து கொடூர விபத்து...

இரண்டாக உடைந்து நொறுங்கிய கார்... ஒருவர் உயிரிழப்பு...

=====

கார் வெடித்து விபத்து - புதிய தகவல்

கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக பொள்ளாச்சி பிரபாகரனிடம் போலீசார் விசாரணை...

3 ஆண்டுகளுக்கு முன்னரே காரை விற்பனை செய்ததாக போலீசாரிடம், பிரபாகரன் தகவல்...

=====

6 தனிப்படைகள் விசாரணை - டிஜிபி சைலேந்திரபாபு

கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக 6 தனிப்படை விசாரணை...

டிஜிபி சைலேந்திரபாபு தகவல்...

====

"தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அவசியம் இல்லை"

கோவையில், காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அவசியம் இல்லை...

டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..

====

"சிசிடிவி காட்சிகள் ஆய்வு"

"சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்..."

ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தகவல்...

=====

ஆணி, கோலி குண்டு, பால்ரஸ் குண்டுகள்...

கார் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், கோலி குண்டுகள், பால்ரஸ் குண்டுகள் கண்டெடுப்பு...

11 மணி நேரத்திற்கும் மேலாக, தடயவியல் துறையினர் சோதனை...

வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் பாதுகாப்பு

கோவையில், கோயில் அருகே காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் எதிரொலி... மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு...

வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு...

===

சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

கோவையில், காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் எதிரொலி - சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு...

முக்கிய வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் உத்தரவு...

===

ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு

ரயில் நிலையங்களிலும், பொது மக்கள் கூடும் இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு...

தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்நிலை...

===

"கார் வெடி விபத்தில் சந்தேகம்"

கோவை கார் வெடி விபத்தில் பொது மக்கள் அச்சம்...

கோயிலை குறிவைத்து தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி...

====

"சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு"

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது...

சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு என்றும்,

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...

வடிகால் பணிகள் - தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னை அடையாறில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் இறையன்பு...

பொது மக்களிடம் குறைகள் கேட்பு... பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தல்...

=====

கால்வாயில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி

சென்னை எம்ஜிஆர் நகரில் மழை நீர் வடிகாலில் விழுந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி....

பணிக்காக தோண்டப்பட்ட கால்வாயில் விழுந்து படுகாயங்களுடன் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழப்பு...

====

முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்...

5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு...

====

பட்டாசுக்கடையில் தீ விபத்து - 2 பேர் பலி

விஜயவாடாவில், காந்திநகர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக்கடையில் தீ விபத்து...

இரண்டு பேர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை...

====

"மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிறப்பு வார்டு"

அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காயங்களுக்கு சிறப்பு வார்டுகள் தயார் நிலை...

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

=====

கந்துவட்டி கொடுமை - தொழிலாளி தற்கொலை

சேலத்தில், கந்துவட்டி கொடுமையால், நகை தொழிலாளி தற்கொலை...

நடவடிக்கை கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்...

அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி

அமெரிக்காவில் களைக்கட்டிய தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள்...

மக்களுடன் தீபாவளி கொண்டட்டத்தில் பங்கேற்ற துணை அதிபர் கமலா ஹாரிஸ்....

====

மீண்டும் சீன அதிபரானார் ஜி ஜின்பிங்

மீண்டும் சீன அதிபரானார் ஜி ஜின்பிங்...

தொடர்ந்து 3வது முறையாக தேர்வாகி, வரலாற்றுச் சாதனை...

===

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி....

பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்....

=====

இலங்கை அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை சூப்பர்- 12 சுற்றில்

அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை...

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அபாரம்...

===

தங்கம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்

ஸ்பெயினில் நடைபெற்ற ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வெற்றார் அமன் ஷெராவத்...

ஜூனியர் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என சாதனை...


Next Story

மேலும் செய்திகள்