இன்றைய தலைப்பு செய்திகள் (21.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

"கர்நாடக அரசிடம் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும்"

பெங்களூரு சென்ற முதல்வர் ஸ்டாலின் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியிருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

கர்நாடக அரசிடம் கேட்காமல், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியதாக குற்றச்சாட்டு...

25 வட்டாரங்கள் வறட்சி பகுதியாக அறிவிப்பு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் மிதமான வேளாண் வறட்சி பகுதி...

33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்தவை என அரசாணை வெளியீடு...

"அசல் ஆவணங்களை எடுத்து வர வேண்டும்"

மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாமுக்கு, ஆதார், ரேஷன் கார்டு அசலை எடுத்து வர வேண்டும்...

வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண ரசீது அசலும் தேவை என்று, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்...

"உண்மையான அக்கறை காட்டவில்லை"

நாடாளுமன்றத்தை முடக்கிய மணிப்பூர் விவகாரம்...

எதிர்க்கட்சிகள் உண்மையான அக்கறை காட்டவில்லை என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு...

தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை...

நிபந்தனைகளுடன் விடுவித்தது, இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம்...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது..

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது

கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை...

வள்ளியூர் சார்பு நீதிமன்றம் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்